ஸ்டட்கார்ட் (ஜெர்மனி) – ரஷிய டென்னிஸ் வீராங்கனையும், ஐந்து முறை கிராண்ட் ஸ்லாம் எனப்படும் டென்னிஸ் அனைத்துலப் போட்டிகளின் வெற்றி வாகை சூடியவருமான மரியா ஷரபோவா மீது டென்னிஸ் விளையாடுவதற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ஜனவரி 2016 முதல் இந்த தடை நடப்புக்கு வருகின்றது. தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை அவர் உட்கொண்டது பரிசோதனையின் மூலம் தெரிய வந்ததைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
29 வயதான அவர் ஆஸ்திரேலிய பொது டென்னிஸ் போட்டியின் போது மெல்டோனியம் என்ற தடை செய்யப்பட்ட மருந்தை உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இருப்பினும், அந்த மருந்தை தனது நீரிழிவு நோய்க்காகத் தான் உட்கொண்டு வந்திருப்பதாகவும், அந்த மருந்து தடை செய்யப்பட்ட பட்டியலில் இருப்பது தனக்குத் தெரியாது என்றும் ஷரபோவா தொடர்ந்து கூறி வருகிறார்.