Home Featured கலையுலகம் இன்று முதல் நாடெங்கிலும் 30 திரையரங்குகளில் ‘மயங்காதே’

இன்று முதல் நாடெங்கிலும் 30 திரையரங்குகளில் ‘மயங்காதே’

800
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மைந்தனுக்குப் பிறகு சிகே, ஷைலா நாயர் ஜோடி இரண்டாவது முறையாகச் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘மயங்காதே’.

காதல், குடும்பம், திகில், நகைச்சுவை என அத்தனை அம்சங்களையும் கொண்டிருக்கும் இத்திரைப்படம் இன்று நாடெங்கிலும் 30 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Mayangatheyஇத்திரைப்படத்திற்கு தற்போது ஜிஎஸ்சி அகப்பக்கத்தில் இணையம் வழியான முன்பதிவுகளும் துவங்கிவிட்டன.

#TamilSchoolmychoice

சிகே பிலிம்ஸ், சாய் பா விஷன், டச் ட்ரானிக்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து சுமார் 6 லட்சம் ரிங்கிட் பொருட்செலவில் தயாரித்துள்ளனர்.

மேலும், இத்திரைப்படத்தில் கேகே கானா, நகைச்சுவை நடிகர் ஷாம், டிஎச்ஆர் அகிலா, டிஎச்ஆர் சுரேஸ், அஸ்ட்ரோ சுஸ்மா, திவ்யா நாயுடு, ஸ்ருதி, கண்ணன் ராஜமாணிக்கம் என ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டமே முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.