Home Featured நாடு பாலர் பள்ளியாகக் கூட இருக்கட்டும்: உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகக் கருதாதீர்கள்!

பாலர் பள்ளியாகக் கூட இருக்கட்டும்: உங்கள் குழந்தை பாதுகாப்பாக இருப்பதாகக் கருதாதீர்கள்!

668
0
SHARE
Ad

Rape-Pencil-Sketch (450x230)கோலாலம்பூர் – பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கில் வழக்கின் மூலமாக மலேசியாவில் பல குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது மலேசியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தற்போது சிறார் பாலியல் கொடுமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வந்துள்ளனர்.

அந்த வகையில் நேற்று கோலாலம்பூரில் ‘குழந்தைகளுக்காக ஒரு பாதுகாப்பான மலேசியாவை உருவாக்குவோம்: சிறார் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் தன்னார்வ அமைப்பு ஒன்று கலந்துரையாடலை நடத்தியிருக்கிறது.

#TamilSchoolmychoice

கோலாலம்பூர், பந்தாய் பிசினஸ் பார்க் என்ற இடத்தில் உள்ள மலேசியாவுக்கான அரசியல் கொள்கை மற்றும் மனித உரிமை (MCCHR) மையத்தில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

“செக்ஸ் என்பது இந்நாட்டில் தடை செய்யப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது. என்னுடைய குடும்பம், என்னுடைய பெற்றோர், என்னிடம் அது குறித்துப் பேசத் தயங்குவது போல்” என்று அக்கூட்டத்தில் கலந்து கொண்டு பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் மலேசியாகினியிடம் தெரிவித்துள்ளார்.

பாலியல் குறித்துப் பேசுவதை அசிங்கம் என்று கருதி அதை மறைத்து வைப்பதால் தான் ஹக்கில் போன்றோர், அமைதியாக இருக்கும் அக்குழந்தைகளை தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர் என்று அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பாலர் பள்ளியாகக் கூட இருக்கட்டும் உங்கள் குழந்தை அங்கு பாதுகாப்பாக இருப்பதாகக் கருதி, கவனிக்காமல் இருந்துவிடாதீர்கள் என்று அந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளைப் பாதுகாக்கும் இத்திட்டத்திற்கு பிராஜக்ட் லாயாங் லாயாங் (Projek Layang-layang)  என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் வரும் ஜூன் 25-ம் தேதி, இது தொடர்பான ஒருநாள் பயிற்சி வகுப்பையும் நடத்தவிருப்பதாக அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேல் விவரங்களுக்கு facebook.com/projeklayang2 என்ற பேஸ்புக் பக்கத்தைப் பார்வையிடலாம்.