Home Featured நாடு ஹக்கிலால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

ஹக்கிலால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர்!

587
0
SHARE
Ad

Richard Huckleகோலாலம்பூர் – சிறார் பாலியல் குற்றவாளி ரிச்சர்டு ஹக்கிலால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரை புக்கிட் அம்மான் அடையாளம் கண்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் எத்தனை பேர் உள்ளனர் என்பதை காவல்துறைக் கண்டறிந்து, பிரிட்டன் காவல்துறைக்குத் தகவல் அளிக்கும் என்று தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் தெரிவித்துள்ளார்.

“ஆமாம்.. கடந்த 2014-ம் ஆண்டு எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து அவர்கள் கூடுதல் தகவல்களைக் கொடுக்கவில்லை”

#TamilSchoolmychoice

“சிறார் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக சந்தேகிக்கிறோம் என்று தான் சொன்னார்கள். அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை” என்று இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் காலிட் தெரிவித்துள்ளார்.