Home நாடு புதிய ஐஜிபியாக முகமது ஃபுசி ஹாருன் நியமனம்!

புதிய ஐஜிபியாக முகமது ஃபுசி ஹாருன் நியமனம்!

1345
0
SHARE
Ad

MohamadFuziHarunகோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமையோடு, டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் ஓய்வு பெறுவதால், நாட்டின் புதிய தேசியக் காவல்படைத் தலைவராக டத்தோஸ்ரீ முகமது ஃபுசி ஹாருன் பதவி ஏற்கிறார்.

இந்தப் பதவி நியமனத்தை, தேசியக் காவல்படையின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ நூர் ரஷீத் இப்ராகிம் அறிவித்தார்.

இதுநாள் வரையில் சிறப்புப் படைப் பிரிவு இயக்குநராகச் செயல்பட்டு வந்த முகமது ஃபுசி, அதற்கு முன்னதாக புக்கிட் அம்மான் நிர்வாக இயக்குநர் மற்றும் இடைக்காலத் துணை தேசியக் காவல்படைத் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

இன்று நடைபெற்ற இந்தப் பதவி நியமனம், உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.