Home நாடு எம்ஜிஆர் 100 கண்காட்சி: அரிய புகைப்படங்களும், தகவல்களும்!

எம்ஜிஆர் 100 கண்காட்சி: அரிய புகைப்படங்களும், தகவல்களும்!

1061
0
SHARE
Ad

MGR1கோலாலம்பூர் – ‘பொன்மனச் செம்மல்’ – ‘புரட்சித் தலைவர்’ டாக்டர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரின் அரிய புகைப்படங்களைக் கண்காட்சி போல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவிருக்கிறது.

இக்கண்காட்சியில் எம்ஜிஆரின் வாழ்க்கை குறிப்புகளையும் அரிய புகைப்படங்களையும் கண்டு மகிழலாம்.

SP Manivasagam(1)இன்று செப்டம்பர் 4-ம் தேதி மாலை மணி 5.00-க்கு தலைநகர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா மண்டபத்தில் ‘எம்ஜிஆர் 100’ சிறப்பு கண்காட்சி நடைபெறுகின்றது.

#TamilSchoolmychoice

மலேசிய இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத்தின் (MICAS) தலைவர் எஸ்.பி.மணிவாசகம் தலைமையிலான தொண்டார்வளர் குழு,இதனை ஏற்பாடு செய்திருக்கிறது.

datuk_sahadevanமலேசியாவுக்கான இந்தியத் தூதர் திருமூர்த்தியும் தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பா.சகாதேவனும் இக்கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பர். செப்டம்பர் 8-ம் தேதி வரை (ஐந்து  நாட்களுக்கு) மாலை மணி 5.00 முதல் இரவு மணி 9.00 வரை திறக்கப்பட்டிருக்கும் இக்கண்காட்சிக்கு, பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.