Home Video உலகம் சுற்றும் வாலிபன் – மீண்டும் வெற்றிக் கொடி நாட்டும் எம்ஜிஆர்

உலகம் சுற்றும் வாலிபன் – மீண்டும் வெற்றிக் கொடி நாட்டும் எம்ஜிஆர்

1122
0
SHARE
Ad

உலகம் சுற்றும் வாலிபன் – தமிழர்களால் மறக்க முடியாத திரைப்படப் பெயர். வசூலில் சாதனை படைத்த படம் என்பது ஒரு புறமிருக்க, புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் அரசியல், சினிமா வாழ்க்கையில் பல திருப்பங்களை ஏற்படுத்திய படம்.

#TamilSchoolmychoice

தமிழகத்தில் மீண்டும் டிஜிடல் எனப்படும் புதிய மின்னியல் வடிவில் 44 ஆண்டுகளுக்குப் பின்னர் திரையரங்குகளில் திரையேறியிருக்கிறது உலகம் சுற்றும் வாலிபன்.

இரசிகர்கள் அந்தத் திரையீட்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற நாடுகளுடன் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் எடுக்கப்பட்ட படம் உலகம் சுற்றும் வாலிபன்.

மலேசியாவில் உலகம் சுற்றும் வாலிபன் படம் எடுக்கப்பட்டபோது எம்ஜிஆர் கோலாலம்பூர் வந்திருந்த சம்பவங்கள் சில குறித்து சில மாதங்களுக்கு முன்னர் செல்லியலில் 2 காணொலிகளை பதிவேற்றம் செய்திருந்தோம்.

சுவாரசியமான மேற்கண்ட அந்தக் காணொலிகளை மீண்டும் பதிவேற்றம் செய்திருக்கிறோம்.

இதுவரை பார்த்திராதவர்கள் சுவாரசியத் தகவல்கள் அடங்கிய அந்தக் காணொலிகளைப் பார்த்து மகிழுங்கள்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal