Home நாடு வடகொரியா அணு ஆயுதச் சோதனை – மலேசியா கண்டனம்!

வடகொரியா அணு ஆயுதச் சோதனை – மலேசியா கண்டனம்!

992
0
SHARE
Ad

Wisma-Putra-Photoகோலாலம்பூர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, வடகொரியா நடத்திய அணு ஆயுதச் சோதனைக்கு மலேசியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து விஸ்மா புத்ரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த 2006-ம் ஆண்டு முதல் தற்போது வரை வடகொரியா 6 முறை அணு ஆயுதச் சோதனைகளை நடத்தியிருக்கிறது. தற்போது நடத்தப்பட்டிருக்கும் அணு ஆயுதச் சோதனை உட்பட அனைத்துமே ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் எடுத்திருக்கும் தீர்மானங்களை மீறுவது ஆகும்.”

“வடகொரியாவின் இந்த அத்துமீறும் செயல், உலகளவில் அமைத்திக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.”

#TamilSchoolmychoice

“இந்தச் சம்பவத்தை அறிந்து மலேசியா மிகவும் வருத்தமடைகின்றது. எனவே வடகொரியா இது போன்ற அணு ஆயுதச் சோதனைகளை நிறுத்திக் கொள்ளும் படி, விஸ்மா புத்ரா கடுமையாக வலியுறுத்துகிறது.” என்று விஸ்மா புத்ரா தெரிவித்திருக்கிறது.