Home Featured உலகம் பப்புவா கினியா: பிரதமருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு!

பப்புவா கினியா: பிரதமருக்கு எதிராகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு!

895
0
SHARE
Ad

Papua kiniyaபோர்ட் மொராஸ்சுபி – பப்புவா நியூகினியாவில் பிரதமர் பீட்டர் ஓ நீல் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரைப் பதவி விலகுமாறு கூறி போராட்டத்தில் இறங்கிய பப்புவா நியூகினியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது நேற்று புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் 5 பேருக்கும் மேல் குண்டடிபட்டு இறந்துள்ளனர். எனினும் மாணவர்கள் உயிரிழந்ததாகக் கூறுவதில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து ஆசிய மனித உரிமை கண்காணிப்பக துணை இயக்குனர் பில் ராபர்ட்சன் கூறியதாவது:-

#TamilSchoolmychoice

“உண்மையில் இது மிகவும் கொடூரமான சம்பவமாகும். இந்த சம்பவம் குறித்து பீட்டர் ஓ நீல் பாரபட்சமற்ற முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.