சிட்னி, மே 7 – பப்புவா நியூ கினியில் இன்று மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா அருகே உள்ள பப்புவா நியூ கினியில் இருக்கும் போகன்வில் தீவில் இன்று காலை 7.10 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் பப்புவா நியூ கினியில் ரிக்டர் அளவுகோலில் 7.4 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பப்புவா நியூ கினி அருகே உள்ள நியூ பிரிட்டன் தீவில் கடந்த வியாழக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியிருந்தது.
இதையடுத்து பூகம்பத்திற்கு பின்னர் ஏற்படும் நில அதிர்வு, 7.1 என்ற அளவுக்கு ஏற்பட்டது. 3 நாட்களில் 2-வது முறையாக பப்புவா நியூ கினியில் ஏற்பட்டுள்ள 2-வது சக்திவாயந்த நிலநடுக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.