Home உலகம் பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை!

பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை!

839
0
SHARE
Ad

Papua New Guinea1பப்புவா நியூ கினியாவில் உள்ள கடோவார் தீவில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள் அந்நாட்டு வானிலை ஆராய்ச்சியாளர்கள்.

கடோவார் தீவில் உள்ள எரிமலை எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறவிருக்கும் நிலையில், அதன் காரணமாக சுனாமிப் பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த வாரம் தொடங்கி எரியத்தொடங்கிய அந்த எரிமலையின் காரணமாக அப்பகுதியில் வாழ்ந்து வந்த சுமார் 700 பேர் வேறு தீவுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice