கோலாலம்பூர் – 14-வது பொதுத்தேர்தலின் அறிவிப்பை எதிர்பார்த்து தினம் தினம் ஆரூடங்கள் அதிகரித்து வரும் நிலையில், அம்னோ உச்ச மன்ற உறுப்பினர்களில் ஒருவரான முகமது நஸ்ரி அஜிஸ், வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் எனத் தெரிவித்திருக்கிறார்.
இறுதி நாடாளுமன்றக் கூட்டம் குறித்து கிடைத்திருக்கும் தகவலின் அடிப்படையில் சுற்றுலாத்துறை அமைச்சருமான நஸ்ரி இதனைத் தெரிவித்திருக்கிறார்.
“6-வது நாடாளுமன்றத்தின் கடைசிக் கூட்டம் வரும் மார்ச் 5 முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரையில் நடைபெறவிருக்கிறது. கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படுவது மிகவும் அரிது” என்று நஸ்ரி தெரிவித்திருக்கிறார்.