Home இந்தியா சச்சின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது!

சச்சின் மகளுக்கு காதல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது!

1087
0
SHARE
Ad

Sachin daughterபுதுடெல்லி – உலகப் புகழ் பெற்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சரா டெண்டுல்கருக்கு போனில் காதல் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த வாலிபரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.

நிகழ்ச்சி ஒன்றில் சராவைப் பார்த்த அந்நபர், அவரது உறவினர் மூலமாக சராவின் கைப்பேசி எண்ணை வாங்கி, தொடர்ந்து போனில் அழைத்திருக்கிறார்.

ஒருகட்டத்தில், தன்னைத் திருமணம் செய்யம்படி வற்புறுத்தியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

அவ்வாறு தன்னைத் திருமணம் செய்யவில்லை என்றால், கடத்தி விடுவேன் என்று கூறவே, இந்த விவகாரத்தை சரா தனது பெற்றோரிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றது.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தேவ்குமார் மைதி என்ற அந்த இளைஞரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.