Home Featured இந்தியா செல்ஃபி எடுக்க வந்தவரிடம் சச்சின் வாங்கிய சத்தியம்!

செல்ஃபி எடுக்க வந்தவரிடம் சச்சின் வாங்கிய சத்தியம்!

901
0
SHARE
Ad

SachinHelmetadviceபுதுடெல்லி – போக்குவரத்து நிறுத்தம் ஒன்றில், தனது காரின் அருகே செஃபி (தம்படம்) எடுக்க மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை, முன்னாள் இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் சச்சின் டெண்டுல்கர், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று அறிவுரை கூறியிருக்கிறார்.

தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது உயிருக்கு உலை வைக்கும் என்றும், இனி தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டமாட்டேன் என்று சத்தியம் செய்யும் படியும் சச்சின் கூறினார்.

சச்சின் அறிவுரை கூறும் இக்காணொளி தற்போது பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

சச்சின் கூறிய அறிவுரையை ஏற்றுக் கொண்ட அவ்விருவரும், அவருடன் மிகுந்த மகிழ்ச்சியோடு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்று, தற்போது இரு கிராமங்களைத் தத்து எடுத்து பொதுச்சேவைகள் ஆற்றி வரும் சச்சின், ராஜ்ய சபாவின் நியமன நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=30xUFNZdxdU