Home Featured நாடு கோல குபு பாருவில் பாராகிளைடரில் பறந்தவர் மாயம்!

கோல குபு பாருவில் பாராகிளைடரில் பறந்தவர் மாயம்!

1028
0
SHARE
Ad

Paraglidingகோல குபு பாரு – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மதியம் 2.50 மணியளவில், கோல குபு பாரு, புக்கிட் பத்து பகாட்டிலிருந்து பாராகிளைடரில் பறந்த செராசைச் சேர்ந்த ரோஸ்லி என்பவர் மாயமானார். அவருக்கு என்ன நேர்ந்தது என்பது இன்னும் தெரியவில்லை.அவரை தேடும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

நேற்று மதியம் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக, அவரது பாராகிளைடர் சுமார் 4000 அடி வரை இழுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என உலு சிலாங்கூர் ஓசிபிடி கண்காணிப்பாளர் ஆர்.சுப்ரமணியம் தெரிவித்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு நேற்று தேடுதல் பணியை மேற்கொண்ட போது, வானிலை தொடர்ந்து மோசமாக இருந்ததால், அது நிறுத்தப்பட்டு, இன்று திங்கட்கிழமை காலை 8 மணியளவில் தொடங்கப்பட்டதாக ஆர்.சுப்ரமணியம் தெரிவித்தார்.