Home நாடு உலு சிலாங்கூர் தொகுதியில் பிகேஆர் வேட்பாளர் சத்திய பிரகாஷ் நடராஜன்

உலு சிலாங்கூர் தொகுதியில் பிகேஆர் வேட்பாளர் சத்திய பிரகாஷ் நடராஜன்

366
0
SHARE
Ad
டாக்டர் சத்திய பிரகாஷ்

கோலாலம்பூர் : மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள உலு சிலாங்கூரில் பிகேஆர் கட்சியின் சார்பில் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் போட்டியிடுகிறார்.

நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 28) அம்பாங்கில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் – துணைத் தலைவர் ரபிசி ரம்லி முன்னிலையில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.

2018 பொதுத் தேர்தலில் மஇகா சார்பில் இங்கு போட்டியிட்ட டத்தோ ப.கமலநாதன், பிகேஆர் வேட்பாளர் லியோவ் ஹிசியாட் ஹூய்யிடம் தோல்வியடைந்தார். லியோவ்வுக்கு இந்த முறை மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

டாக்டர் சத்திய பிரகாஷ் பிகேஆர் கட்சியின் உலு சிலாங்கூர் தொகுதித் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.

மஇகா இந்த முறை உலு சிலாங்கூரில் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் அங்கு வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.