Home நாடு சுங்கை பூலோ தொகுதியில் டத்தோ ஆர்.ரமணன் போட்டி

சுங்கை பூலோ தொகுதியில் டத்தோ ஆர்.ரமணன் போட்டி

639
0
SHARE
Ad

கோலாலம்பூர் : சிலாங்கூரிலுள்ள சுங்கை பூலோ தொகுதியில் பிகேஆர் கட்சியின் சார்பில் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு (அக்டோபர் 28) அம்பாங்கில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ரபிசி ரம்லி முன்னிலையில் பிகேஆர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

சுங்கை பூலோ தொகுதியின் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசாவுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

#TamilSchoolmychoice

சுங்கை பூலோ தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் மஇகா வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வேட்பாளர் அநேகமாக புனிதன் அல்லது உஷா நந்தினி என்ற ஆரூடங்களும் நிலவுகின்றன.