Home நாடு சிகாமாட்டில் டான்ஸ்ரீ இராமசாமியை எதிர்த்து பிகேஆர் சார்பில் யுனேஸ்வரன் போட்டி

சிகாமாட்டில் டான்ஸ்ரீ இராமசாமியை எதிர்த்து பிகேஆர் சார்பில் யுனேஸ்வரன் போட்டி

463
0
SHARE
Ad

சிகாமாட் : ஜோகூர் மாநிலத்தில் உள்ள சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா சார்பில் டான்ஸ்ரீ ராமசாமி போட்டியிடுகிறார்.

இன்று அம்பாங்கில் அறிவிக்கப்பட்ட பிகேஆர் வேட்பாளர்கள் பட்டியல்படி சிகாமாட் தொகுதியில் பிகேஆர் கட்சி சார்பில் யுனேஸ்வரன் ராமராஜ் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

1982 முதல் ம.இ.கா. தொடர்ச்சியாக போட்டியிட்டு வந்திருக்கும் நாடாளுமன்றத் தொகுதி ஜோகூரில் உள்ள சிகாமாட்டாகும். கடந்த 2018-இல்  சிகாமாட் தொகுதியில் மஇகா தோல்வியடைந்தது.

எட்மண்ட் சந்தாரா மீண்டும் போட்டியிடுவாரா?

14-வது பொதுத்தேர்தலில், சிகாமாட் நாடாளுமன்றத்திற்கான தேசிய முன்னணி வேட்பாளர், முன்னாள் மஇகா தலைவராக இருந்த டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம், நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹாரப்பான்) வேட்பாளராக பிகேஆர் கட்சி சார்பில் போட்டியிட்ட டத்தோஸ்ரீ டாக்டர் எட்மண்ட் சந்தரா குமாரிடம் 5,476 வாக்குகள் பெரும்பான்மையில்
தோல்வியடைந்தார்.

2020ஆம் ஆண்டில் அஸ்மின் அலியுடன் இணைந்து பிகேஆர் கட்சியிலிருந்து வெளியேறினார். எட்மண்ட் சந்தாரா.  ஷெரட்டன் நகர்வு திட்டத்தின் கீழ் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியைக் கவிழ்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் அவரும் ஒருவர்.

பின்னர், பெர்சத்து கட்சியில் அவரும் அஸ்மின் அலியும் இணைந்தனர். அண்மையில் எட்மண்ட் சந்தாரா பெர்சத்து கட்சியிலிருந்து விலகி, பிபிஎம் எனப்படும் பார்ட்டி பங்சா மலேசியா என்ற கட்சியில் சுராய்டா கமாருடின் தலைமைத்துவத்தின் கீழ் இணைந்தார்.

பிபிஎம் கட்சி தேசிய முன்னணியில் இணைவதற்கு விண்ணப்பம் செய்திருப்பதாகவும் சுராய்டா  அறிவித்திருந்தார். ஆனால், அந்த விண்ணப்பத்தை தேசிய முன்னணி ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது.

இதற்கிடையில் பிபிஎம் கட்சியில் தலைமைத்துவப் போராட்டமும் தொடங்கிவிட்டது. அந்தக் கட்சியில்   சுரைடாவுக்கும் லேரி சிங்குக்கும் இடையில் யார் தலைவர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிகாமாட் தொகுதியில் தான் மீண்டும் போட்டியிடப் போவதாக எட்மண்ட் சந்தாரா
அறிவித்திருக்கிறார். அவர் பிபிஎம் கட்சி சார்பில் போட்டியிடுவாரா என்பதும் இன்னும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை.

அதே வேளையில் கடந்த 3 ஆண்டுகளாக சிகாமாட் தொகுதியில் ஒருங்கிணைப்பாளராக இருந்த மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ எம்.அசோகன்  இராமசாமி மஇகா சார்பில் தேர்வு செய்யப்பட்டதற்கு தன் ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.