Home நாடு ஓங் தீ கியாட் வாரிசானில் இணைகிறார் – பாண்டானில் போட்டியிடலாம்!

ஓங் தீ கியாட் வாரிசானில் இணைகிறார் – பாண்டானில் போட்டியிடலாம்!

380
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மசீசவின் முன்னாள் தேசியத் தலைவர் ஓங் தீ கியாட் தற்போது வாரிசானில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான அவர் தனது பழைய தொகுதியான பாண்டானில் போட்டியிட உத்தேசித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

முன்பு அம்பாங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் பின்னர் பாண்டான் தொகுதிக்கு மாறினார். அந்தத் தொகுதியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அந்த அனுபவத்தின் அடிப்படையில் மீண்டும் பாண்டான் தொகுதியில் வாரிசான் கட்சியின் சார்பில் அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.