Home நாடு மூடா கட்சி போட்டியிடும் 3 நாடாளுமன்றத் தொகுதிகள்

மூடா கட்சி போட்டியிடும் 3 நாடாளுமன்றத் தொகுதிகள்

368
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பக்காத்தான் ஹாரப்பானுடன் இணைந்து பொதுத் தேர்தலில் களம் காணவிருக்கும் மூடா கட்சி 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தியுள்ளது.

கப்பளா பத்தாஸ், தஞ்சோங் காராங், தஞ்சோங் பியாய் ஆகியவையே அந்த 3 தொகுதிகளாகும்.

டேனியல் அப்துல் மஜித் கப்பளா பத்தாசில் போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

சித்தி ரஹாயு பஹாரின் தஞ்சோங் காராங் தொகுதியிலும் லிம் வெய் ஜின் தஞ்சோங் பியாய் தொகுதியிலும் மூடா சார்பில் போட்டியிடவிருக்கின்றனர்.

இந்த 3 தொகுதிகளிலும் வெல்வது கடுமையான போராட்டமாக இருக்கும் என மூடா கட்சியின் தேர்தல் இயக்குநர் அமீரா ஆயிஷா தெரிவித்தார்.

சபாவில் ஒரு தொகுதியில் மூடா போட்டியிடவிருப்பதையும் அமீரா ஆயிஷா குறிப்பிட்டார்.பொதுத் தேர்தலில் தங்களின் சொந்த சின்னத்தை மூடா கட்சி பயன்படுத்தும்.