சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், சென்னை அண்ணா சாலையில், வழக்கம் போல் வாகனங்கள் பரபரப்பாகச் சென்று கொண்டிருந்த வேளையில், திடீரென சாலையில் ஏற்பட்ட மிகப் பெரிய பள்ளத்தில், அரசுப் பேருந்து ஒன்றும், காரும் சிக்கிக் கொண்டன.
எனினும், அதிருஷ்டவசமாக இவ்விபத்தில் பேருந்துப் பயணிகள் மற்றும் கார் ஓட்டுநர் டாக்டர் ராஜேஷ் ஆகியோர் காயமின்றி உயிர்தப்பினர்.
இந்நிலையில், பரபரப்பாக செயல்பட்ட மீட்புப்படையினர், பள்ளத்தில் இருந்து பேருந்தையும், காரையும் வெளியே எடுத்தனர்.
தற்போது சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
அண்ணா சாலையில் மெட்ரோ சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சாலையின் அடிப்புறத்தில் ஈரப்பதம் அதிகரித்து இந்தப் பள்ளம் ஏற்பட்டிருக்கலாம் என சம்பவ இடத்தைப் பார்வையிட்ட நிதியமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார்.