Home Featured உலகம் எகிப்தில் 2 கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்! 45 பேர் மரணம்!

எகிப்தில் 2 கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது ஐஎஸ்ஐஎஸ் தாக்குதல்! 45 பேர் மரணம்!

825
0
SHARE
Ad

Egypt-tanta-church attack

கெய்ரோ – இன்று ஞாயிற்றுக்கிழமை எகிப்து நாட்டிலுள்ள இரண்டு கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், இதுவரை 45 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர்.

இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான  ஐஎஸ்ஐஎஸ் இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டதாக அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

119 பேர் வரை இந்தத் தாக்குதல்களால் காயமடைந்திருக்கின்றனர்.

முதல் தாக்குதல் உள்நாட்டு நேரப்படி காலை 9.30 மணிக்கு நடத்தப்பட்டது. பின்னர் சில மணி நேரங்கள் கழித்து இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டும் தற்கொலைப் படையினரால் நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்களாகும்.