Home One Line P2 எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாராக் காலமானார்

எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாராக் காலமானார்

805
0
SHARE
Ad

கெய்ரோ – எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாராக் இன்று செவ்வாய்க்கிழமை தனது 91-வது வயதில் காலமானார்.

சுமார் முப்பதாண்டு காலத்திற்கு எகிப்தை வலிமையுடன் ஆட்சி செய்த முபாராக் பிப்ரவரி 2011-இல் பதவியிலிருந்து விலகினார்.

1981- இல் அப்போதைய அதிபர் அன்வார் சாடாட் சுட்டுக் கொல்லப்பட அவருக்குப் பதிலாக பதவிக்கு வந்தவர் முபாராக்.

#TamilSchoolmychoice

1979-இல் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து அரேபிய நாடுகளுடன் இணையாமல் தனித்து விடப்பட்ட எகிப்தை பத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் கொண்டு வந்து இணைத்தவர் முபாராக்.

இஸ்ரேலுடன் அமைதியைப் பாராட்டிய முபாராக் எகிப்து இஸ்லாமியத் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கிக் கொள்ளாதவாறு திறமையுடன் ஆட்சியை நடத்தினார்.

30 ஆண்டுகால ஆட்சியை எதிர்த்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களின்போது, சில ஆர்ப்பாட்டக்காரர்களை கொல்வதற்கு உத்தரவிட்ட காரணத்திற்காக முபாராக் விசாரிக்கப்பட்டு 2011-இல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

அந்த ஆர்ப்பாட்டங்கள்தான் முபாராக்கை ஆட்சியிலிருந்தும் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.