டிரம்ப் வருகையின்போது இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம் குறித்த முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை.
இருப்பினும், இந்தியா, அமெரிக்கா இடையில் தற்காப்பு, எரிசக்தி, தொலைத் தொடர்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
கோடிக்கணக்கான டாலர் மதிப்பிலான தற்காப்பு ஆயுதங்களையும் ஹெலிகாப்டர் போன்ற சாதனங்களையும் அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
டிரம்பின் இந்திய வருகையின்போது புதுடில்லியில் குடியுரிமை சட்டம் தொடர்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் அவரது வருகையின் உற்சாகத்தை தணியச் செய்தன.