Home One Line P1 “நம்பிக்கைக் கூட்டணியிடம் பெரும்பான்மை இருக்கிறது” – அமானாவின் காலிட் சமாட்

“நம்பிக்கைக் கூட்டணியிடம் பெரும்பான்மை இருக்கிறது” – அமானாவின் காலிட் சமாட்

765
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா – நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பிகேஆர் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அக்கட்சியின் வியூகத் தொடர்புத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான காலிட் சமாட் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான பெரும்பான்மை தங்களிடம் இருப்பதாக தெரிவித்தார்.

எனினும் அடுத்த பிரதமராக யாரை முன்மொழியப் போகிறோம் என்பது குறித்து அவர் கருத்துரைக்கவில்லை.

தெளிவான பெரும்பான்மை இருக்கும் பட்சத்தில் மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தி பணத்தை விரயமாக்க வேண்டியதில்லை என்றும் காலிட் சமாட் கூறினார்.