Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டியது, பிரதமர் தேர்வு நாளை அறிவிக்கப்படும்!

நம்பிக்கைக் கூட்டணி ஒருமித்த கருத்தை எட்டியது, பிரதமர் தேர்வு நாளை அறிவிக்கப்படும்!

1274
0
SHARE
Ad
இன்று மாலையில் பிகேஆர் தலைமையகத்தில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைமையகத்தில், இன்று மாலையில் நடைபெற்ற நம்பிக்கைக் கூட்டணியின் அவசரக் கூட்டம் முடிந்து அனைத்து தலைவர்களும் எந்தவொரு தெளிவான கருத்துகளும் வெளியிடாமல் சென்றது ஏமாற்றத்தை அளித்துள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். நீண்ட நேரம் காத்திருந்த பத்திரிகையாளர்களுடன் சந்திப்பை நடத்தாது சென்றது இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

காலிட் சாமாட் (ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர்), சலாவுடின் அயோப் (பொந்தியான்) ஹுசாம் மூசா (அமானா உதவித் தலைவர்), லிம் குவான் எங் (பாகான்), லிம் கிட் சியாங் (இஸ்காண்டார் புத்ரி), டாக்டர் முகமட் ஹாட்டா ராம்லி (லுமுட்), மற்றும் எம். குலசேகரன் (ஈப்போ பாராட்) ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இன்று நடைபெற்ற கூட்டத்தில் நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக உள்ள  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாமன்னரை சந்திக்க ஓர் உடன்பாட்டை எட்டியதாக கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், லிம் கிட் சியாங் மற்றும் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அமானா கட்சியின் முஜாஹிட் யூசோப் ராவா உள்ளிட்ட பெரும்பாலான தலைவர்கள் கூட்டம் முடிந்து எந்தவொரு பதிலும் கூறாமல் வெளியேறினர்.

நம்பிக்கைக் கூட்டணி பிரதமரைத் தேர்ந்தெடுத்தது குறித்து, நாளை புதன்கிழமை வெளிப்படுத்தப்படும் என்று சலாவுடின் அயோப் கூறினார்.

முன்னதாக, தேசிய முன்னணி மற்றும் பாஸ் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என்றும், புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் மாமன்னரைக் கேட்டுக் கொண்டன.