Home English News தேசிய முன்னணி, பாஸ், மகாதீருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டன – மறுதேர்தல் வைக்க கோரிக்கை

தேசிய முன்னணி, பாஸ், மகாதீருக்கான ஆதரவை மீட்டுக் கொண்டன – மறுதேர்தல் வைக்க கோரிக்கை

793
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று செவ்வாய்க்கிழமை மாலையில் புத்ரா உலக வாணிப மையத்தில் தேசிய முன்னணி, பாஸ் தலைவர்கள் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் துன் மகாதீர் பிரதமராகத் தொடர தாங்கள் வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாகவும், மக்கள் வாக்களித்த நம்பிக்கைக் கூட்டணி தோல்வியடைந்து விட்டதால், மக்களுக்கே மீண்டும் அடுத்த அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை வழங்கும் வகையில் மீண்டும் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அம்னோவின் சார்பில் அதன் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா, மசீச சார்பில் அதன் தேசியத் தலைவர் வீ கா சியோங், மஇகா சார்பில் அதன் துணைத் தலைவர் எம்.சரவணன், மற்றும் பிபிஆர்எஸ் கட்சியின் பிரதிநிதி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மகாதீர் கட்சி அடிப்படையில் அல்லாமல், தனிநபர் அடிப்படையில் அடுத்த ஒற்றுமை அரசாங்கத்தை அமைக்க முயற்சி செய்வதால் தாங்கள் அவருக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாக இந்தத் தலைவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

ஜசெக இல்லாத ஆட்சி அமைக்கப்படவே தாங்கள் மகாதீருக்கு ஆதரவு தர முன்வந்ததாகவும் அவ்வாறு அமைவதற்கான சாத்தியம் இல்லை என்பதால் தங்களின் ஆதரவை மீட்டுக் கொள்வதாகவும் தெரிவித்த அவர்கள் இதே அடிப்படையில் அடுத்த பொதுத் தேர்தலை நடத்தும்படியானத் தங்களின் கோரிக்கையை மாமன்னருக்கும் தெரிவித்து விட்டதாகவும் தெரிவித்தனர்.