Home One Line P1 சரவாக்கின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவு

சரவாக்கின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகாதீருக்கு ஆதரவு

927
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 32 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம் சரவாக். அங்குள்ள உள்ளூர் கட்சிகள் இணைந்து காபுங்கான் பார்ட்டி சரவாக் (GPS – Gabungan Parti Sarawak) என்ற கூட்டணியை ஏற்படுத்தி சரவாக் மாநிலத்தை ஆண்டு வருகின்றன.

ஏற்கனவே, இந்தக் கட்சிகள் தேசிய முன்னணியில் இணைந்திருந்தன.

நேற்று செவ்வாய்க்கிழமை மாமன்னரைச் சந்தித்த காபுங்கான் பார்ட்டி சரவாக்கின் அனைத்து 18 நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகாதீர் பிரதமராக நீடிக்கத் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளன.

#TamilSchoolmychoice

இந்தத் தகவலை அந்தக் கூட்டணியின் பிரதிநிதி ஃபடிலா யூசோப் தெரிவித்திருக்கிறார்.

மகாதீருக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாக தேசிய முன்னணியும், பாஸ் கட்சியும் அறிவித்ததை அடுத்து காபுங்கான் கூட்டணியின் இந்த அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டது.