கெய்ரோ: அண்மையில், சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி வந்த எவர் கிவன் சரக்குக் கப்பல், சூயஸ் கால்வாயின் குறுக்கே சிக்கியதால், உலக வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இந்த கப்பலானது சூறாவளிக் காற்றால் கால்வாயின் குறுக்காக மணலில் மாட்டிக் கொண்டது. இதனால் கால்வாயை கடக்க முடியாமல் நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் அடுத்தடுத்து நின்றுவிட்டன.
இந்த விபத்துக் காரணமாக, ஒவ்வொரு நாளும் 12 முதல் 15 மில்லியன் அமெரிக்க டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எவர் கிவன் கப்பலால் சூயஸ் கால்வாயில் ஏற்பட்ட சேதம், வருவாய் இழப்பு போன்றவற்றுக்காக ஒரு பில்லியன் டாலர் இழப்பீடு வழங்கினால் மட்டுமே கப்பலை விடுவிக்க முடியும் என்று எகிப்து அரசின் சூயஸ் கால்வாய் ஆணையம் அறிவித்துள்ளது