Home உலகம் இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர்: மரண எண்ணிக்கை 3,000 தாண்டியது – 60 விழுக்காட்டினர் பெண்களும்...

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர்: மரண எண்ணிக்கை 3,000 தாண்டியது – 60 விழுக்காட்டினர் பெண்களும் குழந்தைகளும்…

454
0
SHARE
Ad

டெல் அவிவ் : இஸ்ரேல் பகுதிகள் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலும் தொடர்ந்து இஸ்ரேல் காசா முனை மீது நடத்திய தாக்குதல்களிலும் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்தது.

பாதிக்கப்பட்ட மக்கள் இல்லங்களில் இருந்து வெளியேறுவதால மிக மோசமான நிலைமைக்கு அந்த வட்டாரங்கள் சென்று கொண்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் மன்றம் எச்சரித்திருக்கிறது.

காசா முனையில் கொல்லப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் பெண்களும் குழந்தைகளும் என்ற சோகத் தகவலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

காசா முனையிலிருந்து பாதிக்கப்பட்ட மக்கள் எகிப்து மூலமாகத்தான் வெளியேற வேண்டும். ஆனால் எகிப்து இன்னும் தன் எல்லைகளைத் திறந்து விடவில்லை.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோணி பிளிங்கன், எகிப்து – இஸ்ரேல் எல்லைப் பகுதியை எகிப்து விரைவில் திறக்கும் என்றும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையில் ஹாமாஸ் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பணயக் கைதிகளும் இந்தப் போரில் ஒரு மையப் புள்ளியாக உருவெடுத்திருக்கின்றனர்.