Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : பேமிலி பியூட் மலேசியா தமிழ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ : பேமிலி பியூட் மலேசியா தமிழ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுடன் சிறப்பு நேர்காணல்

427
0
SHARE
Ad

பேமிலி பியூட் மலேசியா
தமிழ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுடன் சிறப்பு நேர்காணல்

லோகன், எவராணி & தனேஷ், பங்கேற்பாளர்கள்:

1. உங்களைப் பற்றிப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

லோகன்: நான் 1994-இல் ஒரு நாடக நடிகராக எனது கலைப் பயணத்தைத் தொடங்கினேன். பின்னர், 1996-இல் தொலைக்காட்சித் தயாரிப்புகளில் ஈடுப்பட்டேன். நடிக்கும் தருணத்தில் காணொலி எடிட்டிங் திறன்களில் தேர்ச்சிப் பெற்றேன். தயாரிப்பிற்குப் பின்தைய வேலைகளைச் செவ்வெனச் செய்ய இது வழிவகுத்தது. ஒரு நடிகராக இருக்கும்போதே திரைக்கதை எழுதுவது – இயக்குவது – என எனது திறமைகளைப் பன்முகப்படுத்தினேன். நான் மலேசியத் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் (FDAM) வாழ்நாள் உறுப்பினராக உள்ளேன். மேலும் நடிப்பு, எடிட்டிங் மற்றும் இயக்கம் ஆகியப் பிரிவுகளுக்கான விருதுகளையும் வென்றுள்ளேன்.

எவராணி
#TamilSchoolmychoice

எவராணி: நான் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாகக் கலைத்துறையில் இருக்கிறேன். பல்வேறு உள்ளூர் மற்றும் இந்தியத் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளேன். முக்கியக் கதாப்பாத்திரம் அல்லது துணைக் கதாப்பாத்திரம் ஆகிய இரண்டிலும் என்னுடைய நடிப்புத் திறமைக்காகப் பல பாராட்டுகளைப் பெற்றிருக்கிறேன்.

தனேஷ்: நான் 20 வயதிலிருந்தே சுமார் 8 ஆண்டுகளாக உள்ளடக்க உருவாக்கத் துறையில் இருக்கிறேன். நான் யூடியூப் மற்றும் பிறச் சமூக ஊடகத் தளங்களில் காணொலிகளை உருவாக்கி வருகிறேன். திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட முயற்சிக்கிறேன். நான் மலேசியாவின் பல முன்னணிப் பிராண்டுகளான TNB, McDonald’s, Digi, Celcom, Maybank, INTI, Nestle போன்றவற்றின் சமூக ஊடக விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கத்தில் பணிபுரிந்துள்ளேன்.

தீபாவளி உட்படப் பலக் கொண்டாட்டங்களுக்கானப் பிரபலமான பெட்ரோனாஸ் விளம்பரங்களிலும் நடித்துள்ளேன். சமீபத்தில், நான் ‘சில நாழிகை அவள் வந்து போனது’ என்ற 5-அத்தியாயத் தமிழ் யூடியூப் வலைத் தொடரை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்துள்ளேன். திரைப்படத் தயாரிப்பில் இதுதான் எனது முதல் முயற்சி. அப்போதிலிருந்து, நானும் எனதுக் குழுவும் வேறு சில தொலைக்காட்சித் தொடர்களுக்கான திரைக்கதை (ஸ்கிரிப்ட்) எழுதும் திட்டங்களில் பணியாற்றி வருகிறோம்.

2. பேமிலி பியூட் மலேசியா தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் எவ்வாறு இருந்தது?

லோகன்: விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது வேடிக்கையாக இருந்தது. விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே எனது முதல் முறை. உடனடியாகப் பதில்கள் கூற வேண்டியிருந்ததால் அது சற்றுச் சவாலாக இருந்தது. எதிரணியினரைச் சவால் விட என்னுள் இருந்த படைப்பாற்றலைப் பேமிலி பியூட் மலேசியா தமிழ் தூண்டியது.

எவராணி: பேமிலி பியூட் மலேசியா தமிழ் போன்ற விளையாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறை. நான் அதை மிகவும் இரசித்தேன். வாழ்வில் போற்ற மிகவும் அழகான நினைவுகளும் கிடைத்தன. உள்ளூர் திறமையாளர்கள் வென்ற ரொக்கப் பரிசைத் தேர்ந்தெடுக்கப்பட்டத் தமிழ் பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கும் நல்ல நோக்கத்துடன் நிகழ்ச்சியை நடத்திய ஆஸ்ட்ரோவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

தனேஷ்

தனேஷ்: அமெரிக்கப் பதிப்பிலிருந்து தழுவப்பட்ட ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி, ‘பேமிலி பியூட்’. எனவே, அவர்கள் மலேசியப் பதிப்பை, குறிப்பாகத் தமிழில் உருவாக்குகிறார்கள் என்றுக் கேள்விப்பட்டப்போது, அதில் ஒரு பகுதியாக இருக்க ஆசைப்பட்டேன். சமூக ஊடக உள்ளடக்கத் தயாரிப்பாளர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்களைக் கொண்ட எனதுக் குழு உறுப்பினர்கள் மிகவும் பெருங்களிப்புடையவர்களாக இருந்தனர். மலேசியத் திரைப்படத் துறையைச் சேர்ந்த மூத்தக் கலைஞர்களுக்கு எதிராக விளையாடியது மகிழ்ச்சியளித்தது. நாங்கள் தோல்வியடைந்திருந்தாலும், இறுதியில் ஒரு தமிழ் பள்ளிக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டதில் எனக்கு மிகுந்தத் திருப்தி.

3. உங்கள் இரசிகர்களுக்காக ஒரு செய்தியைப் பகிரவும்.

லோகன்: ஒரு கலைஞராக ஏறக்குறைய 30 ஆண்டுகளாக எனது பயணத்தில், என்னைப் பின்பற்றி ஆதரவளித்ததற்கு நன்றி. இரசிகர்கள் இல்லாமல், எங்கள் வாழ்க்கையில், குறிப்பாகக் கலைத்துறையில் எங்களின் வளர்ச்சியை மதிப்பிட முடியாது. எனவே, அவர்களுக்குக் கோடானக் கோடி நன்றிகள்.

எவராணி

எவராணி: இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் நன்றி. எனதுப் படைப்புகளின் வழி இரசிகர்களை மகிழ்வித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் மேலும் வளரவும் மேலும் அங்கீகாரத்தைப் பெறவும் எங்களுக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கவும்.

தனேஷ்: நானும் எனது நண்பர்களும் உருவாக்கும் உள்ளடக்கத்தைத் தொடர்ந்துப் பார்க்கவும். நாங்கள் உருவாக்கும் தயாரிப்புகள் மற்றும் உள்ளடக்கத்தின் மீது தொடர்ந்து நீங்கள் காட்டும் ஆர்வமும் அன்பினாலும் நாங்கள் வளர்கிறோம். உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை மற்றும் நாங்கள் செய்யும் எதிலும் நேர்மையானக் கருத்துக்களை வரவேற்கிறோம். எங்களின் உள்ளடக்கங்களைக் கண்டு மகிழுங்கள். எங்களைப் தொடர்ந்துப் பின்தொடர்க. நன்றி!

தனேஷ்