Home உலகம் முன்னாள் எகிப்திய அதிபர் முகமட் மோர்ஸி விசாரணையின் போது மயங்கி விழுந்து காலமானார்!

முன்னாள் எகிப்திய அதிபர் முகமட் மோர்ஸி விசாரணையின் போது மயங்கி விழுந்து காலமானார்!

928
0
SHARE
Ad

கெய்ரோ: எகிப்திய முன்னாள் அதிபர் முகமட் மோர்ஸி (67) நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கையில் மயக்கம் அடைந்து கீழே விழுந்ததில் மரணமுற்றதாக ஏஎப்சி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவர் நீதிபதி முன் 20 நிமிடங்கள் பேசியதாகவும், பின்னர் மயக்கம் அடைந்தார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆயினும், அவர் இறந்து விட்டதாக நீதித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

கடந்த 2012-இல் எகிப்தின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராக மோர்ஸி இருந்தார். பின்பு ஒரு வருடக் காலத்திலேயே இராணுவத்தால் அவர் அகற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.