Home நாடு ஹசிக் நிலை குறித்து இவ்வாரம் முடிவெடுக்கப்படும்!- ஷம்சுல்

ஹசிக் நிலை குறித்து இவ்வாரம் முடிவெடுக்கப்படும்!- ஷம்சுல்

726
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மூலத் தொழில் துணையமைச்சர் ஷம்சுல் இஸ்காண்டார் முகமட் அகின் ஹசிக் அப்துல்லா பதவி குறித்து இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தெரியப்படுத்துவார் எனக் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் 14-ஆம் தேதி ஹசிக் காரணக் கடிதத்தை வெளியிட்டதாகவும், அதனை அமைச்சு கவனித்து வருவதாகவும் ஷம்சுல் கூறினார்.

ஹசிக் சம்பந்தப்பட காணொளி வெளியிடப்பட்டதால் தாம் மன அழுத்தத்திற்கு ஆளானதாகக் குறிப்பிட்டிருந்த ஹசிக் அமைச்சை தொடர்பு கொள்ள தமக்கு நேரம் தேவைப்பட்டதாக அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்ததாக அமைச்சர் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த ஜூன் 14-ஆம் தேதி அந்த காரணக் கடிதம் வெளியிடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

எந்த ஒரு தகவலுமின்றி பணிக்கு வராமல் இருந்ததைக் கண்டித்த அமைச்சர், ஹசிக் பணியிலிருந்து நீக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகளையும் முன்வைத்தார்.