Home One Line P1 அஸ்மின் அலி காணொளி: முகம் தெளிவாக இல்லாததால், யார் மீதும் குற்றம் சுமத்தப்படாது!- டோமி தோமஸ்

அஸ்மின் அலி காணொளி: முகம் தெளிவாக இல்லாததால், யார் மீதும் குற்றம் சுமத்தப்படாது!- டோமி தோமஸ்

831
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பல மாதங்களுக்கு முன்னர் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியுடன் சம்பந்தப்படுத்தப்பட்ட  ஓரினச் சேர்க்கை காணொளி தொடர்பாக எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படாது என்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளத்   தொடர்பாக எந்தவிதமான குற்றச்சாட்டுகளையும் சுமத்த முடியாது என்று கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணொளியின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த தண்டனைச் சட்டத்தின் 377பி மற்றும் 377டி பிரிவுகளின் கீழ் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த சூழ்நிலைகளிலும், காவல் துறையினர் சேகரித்த தகவல்களை மறுஆய்வு செய்தபின், துணை அரசு வழக்கறிஞர்கள் ஏகமனதாக காணொளி தொடர்பாக எந்தவிதமான குற்றச்சாட்டுகளும் செய்யக்கூடாது என்று என்னிடம் பரிந்துரைத்தார்”

நான் பரிந்துரையை ஏற்றுக்கொண்டேன். மற்ற தரப்பினருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். சாதாரண நடைமுறைக்கு ஏற்ப, புதிய சான்றுகள் கிடைத்தால், விசாரணையை மீண்டும் திறக்க முடியும்என்று இன்று வியாழக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட அக்காணொளிகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், அதன் நம்பகத்தன்மையை தீர்மானிக்க அனுப்பப்பட்டன என்று டோமி கூறினார்.

காணொளி உண்மையானது எனக் கருதப்பட்டாலும், குறைந்த காணொளிப் பதிவுக் காரணமாக முக அடையாளத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்று சைபர் செக்யூரிட்டி மலேசியாவும் முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார்.

இதற்கிடையில், புதிய சான்றுகள் கிடைத்தால் விசாரணைகள் மீண்டும் திறக்கப்படலாம் என்றும் டோமி கூறினார்.