Home One Line P2 ‘சூரரைப் போற்று’ முன்னோட்டக் காணொளி வெளியீடு!

‘சூரரைப் போற்று’ முன்னோட்டக் காணொளி வெளியீடு!

915
0
SHARE
Ad

சென்னை: இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வெளிவர இருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. 

இப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். முன்னதாக, இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் இரண்டாம் தோற்றம் வெளியாகி பரவலாகப் பகிரப்பட்டன.

#TamilSchoolmychoice

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்இவர்களுடன் தெலுங்கு நடிகர் மோகன் பாபுகருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்

இந்தியாவின் முதல் குறைந்த செலவிலான விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் முன்னோட்டக் காணொளி ஜனவரி 7-ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கீழேகொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: