Home நாடு செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மாமன்னர் உத்தரவிடலாம்

செல்லியல் ஒரு வரிச் செய்திகள் : பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர மாமன்னர் உத்தரவிடலாம்

547
0
SHARE
Ad

பிரதமர் மீது நம்பிக்கைத் தீர்மானம் கொண்டுவர மாமன்னர் உத்தரவிடலாம்

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சனைகளைத் தீர்க்கவும், பிரதமர் மொகிதின் யாசின் அரசாங்கம் சட்டபூர்வமானதல்லை என எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு காணவும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கும் முன்பாக கூட்டப்படவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர மான்னர் உத்தரவிடலாம் என முன்னாள் சட்டத் துறைத்தலைவ டோமி தோமஸ் தெரிவித்துள்ளார்.

ஒருநாளில் 236,196 தடுப்பூசிகள் போடப்பட்டன

நேற்று வெள்ளிக்கிழமை ஜூலை 2-ஆம் தேதி ஒரு நாளில் நாடு முழுமையிலும் 236,196 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருப்பது, கொவிட் தடுப்பூசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டு வருவதைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

ஜூலை மாதத்தில் மேலும் 12 மில்லியன் அளவை தடுப்பூசிகள் வந்தடையும்

ஜூலை மாதத்திற்குள் நாட்டிற்கு மேலும் கூடுதலாக 12 மில்லியன் அளவைகள் தடுப்பூசிகள் வந்தடையும் என கொவிட் தடுப்பூசித் திட்டத்திற்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

சாஹிட் ஹாமிடி மீதான ஊழல் வழக்கு ஆகஸ்ட் 5-இல் தொடரும்

#TamilSchoolmychoice

அம்னோ தேசியத் தலைவர் அகமட் சாஹிட் ஹாமிடி மீதான ஊழல் வழக்கில் அரசாங்கத் தரப்பு தனது தரப்பு வழக்கை முடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இருதரப்புகளின் வாதங்களையும் நீதிமன்றம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி ஆறு நாட்களுக்கு செவிமெடுக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒப்பந்த மருத்துவர்களுக்கு அமைச்சரும் ஆதரவு

நியாயமற்ற பணியிட நிபந்தனைகளுக்கு நடுவில் பணியாற்றுவதாகக் கூறி போராட்டத்தில் இறங்கியிருக்கும் அரசாங்கத்தின் ஒப்பந்த மருத்துவர்களுக்கான ஆதரவு எல்லாத் தரப்புகளில் இருந்தும் பெருகி வருகிறது என்பதை சுட்டிக் காட்டும் விதமாக தகவல் தொடர்பு அமைச்சர் சைபுடின் அப்துல்லா தனது முகநூல் பக்கத்தை கறுப்பு வண்ணத்திற்கு மாற்றியுள்ளார்.