இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்து 5,434 ஆக உயர்ந்தது.
ஒருநாள் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 6 ஆயிரத்துக்கும் கூடுதலாக நாள்தோறும் அதிகரித்து வருகிறது.
இன்று ஒருநாளில் பதிவான மொத்த தொற்றுகள் 6,658 ஆகும்.
மரணமடைந்தவர்களில் 69 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர். 36 பேர் 50-க்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட வயதினர்களாவர்.
இதற்கிடையில் இன்று சனிக்கிழமை ஜூலை 3-ஆம் தேதி வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 6,658 என பதிவாகியது.
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 772,607 ஆக உயர்ந்திருக்கிறது.
மொத்தம் பதிவான 6,658 தொற்று சம்பவங்களில் 6,647 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 11 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 5,677 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 700,215 -ஆக உயர்ந்திருக்கிறது.
கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 66,958 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 892 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 443 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 772, 607 ஆக உயர்ந்திருக்கிறது.
சிலாங்கூர் 3,047 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.
அதற்கு அடுத்த நிலையில் 699 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 616 தொற்றுகளோடு கோலாலம்பூர் பதிவு செய்திருக்கிறது.
சரவாக் 361 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.