Home One Line P1 அஸ்மின் அலி: பாலியல் காணொளி குறித்து அரசாங்க தலைமை வழக்கறிஞர், காவல் துறையினர் அறிக்கை வெளியிடுவர்!

அஸ்மின் அலி: பாலியல் காணொளி குறித்து அரசாங்க தலைமை வழக்கறிஞர், காவல் துறையினர் அறிக்கை வெளியிடுவர்!

870
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கூடிய விரைவில் பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலியுடன் தொடர்புடைய பாலியல் காணொளி விசாரணைக் குறித்த கூட்டு அறிக்கையை அரசாங்கத் தலைமை வழக்கறிஞரும், காவல் துறையும் வெளியிட உள்ளதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.

வெளிநாட்டு நிபுணரிடமிருந்து காணொளி பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுள்ளதாகவும், கடந்த ஆண்டு பிற்பகுதியில் அரசாங்க தலைமை வழக்கறிஞரிடம் இது தொடர்பான விசாரணைக் கட்டுரையை சமர்ப்பித்ததாகவும் அவர் கூறினார்.

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் நாங்கள் (நிபுணர் அறிக்கை) பெற்றோம், விசாரணைக் கட்டுரை அரசாங்க தலைமை வழக்கறிஞருக்கு அனுப்பப்பட்டது. கூடிய விரைவில் காவல் துறை, அரசாங்க தலைமை வழக்கறிஞர் ஊடக அறிக்கையை வெளியிடுவர்என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

கடந்த நவம்பரில், மின்னியல் தடயவியல் நிபுணரால் பகுப்பாய்வு செய்வதற்காக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இந்த காணொளிகள் அனுப்பப்பட்டன. காணொளியில் இருந்த நபரின் அடையாளம், கடந்த ஆண்டு இறுதிக்குள் கண்டுபிடிக்கப்படும் என்று காவல் துறை நம்பிக்கை கொண்டுள்ளது என்று ஹுசிர் கூறியிருந்தார்.