Home One Line P1 “எம்மீது சுமத்தப்பட்ட பாலியல் அவதூறு குற்றச்சாட்டு ஓர் அரசியல் விளையாட்டே!”- அஸ்மின் அலி

“எம்மீது சுமத்தப்பட்ட பாலியல் அவதூறு குற்றச்சாட்டு ஓர் அரசியல் விளையாட்டே!”- அஸ்மின் அலி

662
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தம்மீது சுமத்தப்பட்ட பாலியல் அவதூறு விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ முகமட் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று வியாழக்கிழமை அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், அஸ்மின் அலி சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் அக்காணொளிகளில் இடம் பெற்றிருப்பரவரின் முகம் தெளிவாக இல்லாததால், யார் மீதும் வழக்குத் தொடரப்படாது என்று தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

சர்ச்சைக்குரிய பாலியல் காணொளி குற்றச்சாட்டு முழுக்கவும் அரசியல் விளையாட்டு என்பதை இந்த முடிவு தெளிவுப்படுத்துவதாக அஸ்மின் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகத்திற்கு தாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

இறைவனின் விருப்பத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். துணை அரசு வழக்கறிஞரின் ஏகமனதான முடிவால் நான் எல்லா அவதூறுகளிலிருந்தும் என்னை விலக்கிக் கொண்டேன்என்றுநேற்று அஸ்ட்ரோஅவானியைதொடர்புகொண்டபோதுஅவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில், அவர் தனது மனைவி, குடும்பத்தினர் மற்றும் மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களாக அளித்த அனைத்து ஆதரவிற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.