Home One Line P1 “லத்தீபா கோயாவின் செயல் நியாமற்றது, வருத்தமளிக்கிறது!”- ராம் கர்பால்

“லத்தீபா கோயாவின் செயல் நியாமற்றது, வருத்தமளிக்கிறது!”- ராம் கர்பால்

872
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக், அவரது மனைவி டத்தின்ஶ்ரீ ரோஸ்மா மன்சோர் உள்ளிட்டோரின் தொலைபேசி உரையாடல் பதிவுகளை நேற்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வெளியிட்டதற்கு புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்பால் சிங் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையானது முற்றிலும் நியாயமற்றது மற்றும் வருத்தம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் செயலை அரசியலமைப்பிற்கு விரோதமாகக் கருதுவதாகவும், அது மனித உரிமைகளை தெளிவாக மீறி உள்ளதாகவும், அதனால் இந்த செயலை ஆதரிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இன்று ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்ட ராம் கர்பால், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் லத்தீபா கோயா அவ்வாறு செய்திருக்கக்கூடாது, ஏனெனில் இது தொலைபேசி உரையாடலில் ஈடுபடும் நபர்கள் குறித்து ஊடகங்களின் ஆய்வுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

வெளிப்படையாக, உரையாடலில் என்ன கூறப்பட்டது, அது உண்மையா இல்லையா, அல்லது தனிநபர் உண்மையில் எந்தவொரு குற்றத்தையும் செய்தாரா என்பதை அனைவரும் அறிய விரும்புவார்கள்.

எவ்வாறாயினும், இது நீதிமன்றத்தின் கடமை என்று ராம் கர்பால் கூறினார்.  விசாரணைக்கு ஊடகங்களோ அல்லது எந்தவொரு நிறுவனமோ பொறுப்பேற்கக்கூடாது.

“குற்றவியல் கூறுகள் இருக்கிறதா இல்லையா என்பது எம்ஏசிசி அல்லது காவல் துறையின் விசாரணையைப் பொறுத்தது. அதன் பின்னரே அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் முன்வைக்க வேண்டும்.”

நேற்று புதன்கிழமை எம்ஏசிசி செய்தியாளர் கூட்டத்தில் லத்தீபா கோயா பொது நலன் கருதி ஒன்பது உரையாடல்கள் பதிவுகளை வெளிப்படுத்தினார்.