Home One Line P1 ‘கபாலி’ குண்டர் கும்பல் உறுப்பினர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்!

‘கபாலி’ குண்டர் கும்பல் உறுப்பினர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்!

682
0
SHARE
Ad

சிரம்பான்: கடந்த ஆண்டுகபாலிஎன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குண்டர் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததாகக் கூறி மொத்தம் 19 ஆடவர்கள் இன்று வியாழக்கிழமை அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் நவம்பர் 27 வரை சிரம்பானில் உள்ள ஜாலான் பெசார் பத்து 12 ½ என்ற ஒரு சிறிய சந்து பாதையில் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இக்குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

இருப்பினும், நீதிபதி மடிஹா ஹருல்லா முன் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் குற்றச்சாட்டுகள் தனித்தனியாக வாசிக்கப்பட்ட போது குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்யவில்லை.

#TamilSchoolmychoice

குற்றச்சாட்டு தண்டனைச் சட்டத்தின் பிரிவு 130 வி(1)  கீழ், அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

ஆர்.கமல் ராஜ், எஸ். இளங்கோவன், எல். நவீன்ராஜ் மற்றும் எஸ். சிவபாலன் ஆகியோர் வழக்கறிஞர் வி. முனியாண்டி பிரதிநிதிக்கையில், பி. ரவிக்குமார், டிஎஸ்ஜி. கார்த்திக் மற்றும் கே.சர்குணன் ஆகியோருக்கு வழக்கறிஞர் பார்த்தீபன் பிரதிநிதிக்கிறார். ஜே. தாசன், எஸ். பிரபு மற்றும் ஜி. கார்த்திக் ராஜா ஆகியோரை வழக்கறிஞர் கோ சீ கியான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இந்த வழக்கை விசாரிக்க பிப்ரவரி 14-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.