Home Featured கலையுலகம் “நன்றி தலைவா” – ரஜினிக்கு நன்றி சொல்லிய சச்சின்

“நன்றி தலைவா” – ரஜினிக்கு நன்றி சொல்லிய சச்சின்

1058
0
SHARE
Ad

SachinRajiniசென்னை – இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின், ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற புதிய திரைப்படம் வரும் மே 26-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், அதன் முன்னோட்டம் சில தினங்களுக்கு முன் வெளியாகி மிகுந்த வரவேற்பினைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில், அத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது டுவிட்டரில் சச்சினுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

அவரது டுவிட்டுக்கு பதிலளித்த சச்சின், ”நன்றி தலைவா! தமிழில் இதை தாங்கள் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்” குறிப்பிட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற இத்திரைப்படம் தமிழ், மராத்தி, இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.