Home Featured இந்தியா இந்திய விமானப் படையில் மூன்று இளம் பெண் விமானிகள்!

இந்திய விமானப் படையில் மூன்று இளம் பெண் விமானிகள்!

586
0
SHARE
Ad

women-pilots_650x400_81457462421புதுடெல்லி – பயிற்சி முடிந்த பெண் போர் விமானிகளின் முதல் பிரிவில் இருந்து மூன்று பெண்கள் வரும் ஜூன் 18-ம் தேதி, இந்திய விமானப் படையில் பணியில் சேரவுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு ஒரு வருடம் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. அதன் பிறகு வரும் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் அவர்கள் போன் விமானங்களின் விமானிகளாக நியமிக்கப்படவுள்ளனர்.

வரும் ஜூன் 18-ம் தேதி, அவர்கள் மூவரும் விமானப் படையில் இணையும் விழாவில் இந்தியத் தற்காப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி, பாவனா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி என்ற அந்த மூன்று விமானிகளும் விமானப் படைக்குத் தகுதி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.