Home நாடு காலிட் அபு பக்கர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மகாதீர் தயார்!

காலிட் அபு பக்கர் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மகாதீர் தயார்!

635
0
SHARE
Ad
காலிட் அபு பாக்கார் – முன்னாள் ஐஜிபி

கோலாலம்பூர்: 1எம்டிபி ஊழல் குறித்து விசாரிக்கும் பணிக்குழு குறித்து கசிந்ததில் முன்னாள் காவல் துறை தலைவர் காலிட் அபுபக்கருக்கு பங்கு உள்ளது என்று துன் மகாதீரின் குற்றச்சாட்டுக்கு அபுபக்கர் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க இருப்பதாகத் தெரிகிறது.

அவரை நீதிமன்றத்தில் எதிர்கொள்வதாக டாக்டர் மகாதீர் முகமட் தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

மகாதீர் தனக்கு காலிட்டிடமிருந்து கடிதம் வந்ததாகவும், அதற்கு பதிலளிக்குமாறு தனது வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.

#TamilSchoolmychoice

“நான் அவரை நீதிமன்றத்தில் சந்திப்பேன்,” என்று அவர் கூறினார்.