Home Featured தமிழ் நாடு சத்தியபாமா கல்விக் குழுமத் தலைவர் ஜேப்பியார் காலமானார்!

சத்தியபாமா கல்விக் குழுமத் தலைவர் ஜேப்பியார் காலமானார்!

744
0
SHARE
Ad

சென்னை: எம்ஜிஆர் காலத்தில் அவருக்கு நெருக்கமானவராகவும், அதிமுக பிரமுகராகவும், எம்ஜிஆர் இரசிகர் மன்றங்களில் ஒரு காலத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவரும், சத்தியபாமா கல்விக் குழுமத் தலைவருமான ஜேப்பியார் (படம்) நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார்.

Jaypiar-deceasedஅவருக்கு வயது 85.  உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் காலமானதைத் தொடர்ந்து, சோழிங்கநல்லூரில் உள்ள சத்தியபாமா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஜேப்பியார் நல்லுடல் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடலுக்கு பல்வேறு பிரமுகர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

ஜேப்பியார் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்குச் சொந்தமாக தமிழகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன.