Home Featured நாடு கோலகங்சார்-சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் அதிகாரபூர்வ முடிவுகள்!

கோலகங்சார்-சுங்கை பெசார் நாடாளுமன்ற இடைத் தேர்தல்கள் அதிகாரபூர்வ முடிவுகள்!

740
0
SHARE
Ad

மலேசியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட நேற்றைய இரட்டை நாடாளுமன்ற இடைத் தேர்தல்களின் அதிகாரபூர்வ முடிவுகள் பின்வருமாறு:

கோலகங்சார்

Kuala Kangsar-by-election-results-official

#TamilSchoolmychoice

கோலகங்சாரில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தின் மஸ்துரா யாசிட் 12,653 வாக்குகள் பெற்று 6,969 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றுள்ளார்.

இரண்டாவது நிலையில் பாஸ் வேட்பாளர் டாக்டர் நஜிஹாதுசாலேஹா அகமட் 5,684 வாக்குகள் பெற்றார்

சுங்கை பெசார்

Sungei Besar-by-election-official results

சுங்கை பெசாரில் அமானா கட்சி பாஸ் கட்சியை விட கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட டாக்டர் ரானி 6,902 வாக்குகள் பெற்ற நிலையில் அவரை விட கூடுதலாக 707 வாக்குகள் பெற்றுள்ளார் அமானாவின் அசார் அப்துல் ஷூக்கோர். அசார் பெற்ற மொத்த வாக்குகள் 7,609.

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் மொத்த வாக்குகளை விட 2,289 வாக்குகள் கூடுதலாகப் பெற்று எதிர்க்கட்சிகளின் கோட்டையாகக் கருதப்படும் சிலாங்கூரில் தேசிய முன்னணி வென்றுள்ளது, முக்கிய அரசியல் திருப்பமாகக் கருதப்படுகின்றது.