Home Featured நாடு கோல கங்சார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணிகளைத் தொடங்கினார் மஸ்துரா!

கோல கங்சார் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணிகளைத் தொடங்கினார் மஸ்துரா!

815
0
SHARE
Ad

mastura office first dayகோல கங்சார் – கோல கங்சார் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ள டத்தின் மஸ்துரா முகமட் யாசிட், இன்று வியாழக்கிழமை தொகுதி அலுவலகத்திற்குச் சென்று பணிகளைத் தொடங்கினார்.

சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான முன்னாள் கோல கங்சார் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் மொகமட் கைர் இல் அனுவார் வான் அகமட்டின் மனைவியான மஸ்துரா, இன்று காலை 9.50 மணியளவில் தனது மூத்த மகன் வான் எமிர் அஸ்தாதார் (வயது 26) உடன் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்.

“கோல கங்சார் தொகுதி மக்களுக்காக எனது பணிகளைச் செய்வதில் நான் மிகவும் ஆர்வம் கொண்டுள்ளேன். செய்ய வேண்டிய திட்டங்கள் இன்னும் நிறைய இருப்பதால் நான் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்” என்று சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மஸ்துரா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

படம்: நன்றி (The Star)