Home Featured இந்தியா இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கும்பிளேவுக்கு அதிக வாய்ப்பு!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கும்பிளேவுக்கு அதிக வாய்ப்பு!

709
0
SHARE
Ad

Anil Kumbleபுதுடெல்லி – நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் தேர்வுக்கான நேர்காணலில், கங்குலி, லட்சுமண், டெண்டுல்கர், கும்பிளே, ரவிசாஸ்திரி உள்பட 10 பேரிடம் இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனை கமிட்டி உறுப்பினர்கள் நேர்காணல் நடத்தினர்.

இந்நிலையில், இந்தியக் கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக இவர்களில் ஒருவர் நியமிக்கப்படவிருக்கும் நிலையில், நாளை வெள்ளிக்கிழமை அதற்கான அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் கும்பிளே நியமனம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.