Home Featured நாடு கோலகங்சார்: தேசிய முன்னணி 6,969 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கோலகங்சார்: தேசிய முன்னணி 6,969 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

843
0
SHARE
Ad
Kuala Kangsar by-election-masturaகோலகங்சார் – பல கருத்துக் கணிப்புகளையும் முறியடித்து, கோலகங்சார் இடைத் தேர்தலில் தேசிய முன்னணி அபார வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள தேசிய முன்னணி வேட்பாளர் டத்தின் மஸ்துரா, சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் காலமான கோலகங்சார் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வான் அகமட் வான் ஓமாரின் மனைவியாவார்.

கட்சிகளின் வாக்கு விவரங்கள்

தேசிய முன்னணி – 12,653 

பாஸ் – 5,684

அமானா நெகாரா – 4,883

சுயேச்சை – 54

இந்த தேர்தல் முடிவுகளில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னவென்றால், எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் நின்ற அமானாவை விட, தனித்து நின்ற பாஸ் அதிகமான வாக்குகள் பெற்றிருப்பதுதான்.

அமானா, 4,883 வாக்குகளை மட்டும் பெற்றிருக்கும் நிலையில், பாஸ் 5,684 வாக்குகளைப் பெற்று தனது சக்தியை மீண்டும் நிலை நாட்டியுள்ளது.

இரண்டு எதிர்க்கட்சிகளும் இணைந்தாலும் கூட அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 10,567 வாக்குகள்தான். அப்போதும் கூட தேசிய முன்னணி கூடுதலாக 2,000-க்கும் வாக்குகள் பெற்றுள்ளதால், தேசிய முன்னணியின் மிகத் தெளிவான வெற்றியாக கோலகங்சார் இடைத் தேர்தல் வெற்றி கருதப்படுகின்றது.

#TamilSchoolmychoice

எனவே, இந்த இடைத் தேர்தல் வெற்றி, அனுதாப வாக்குகளால் கிடைத்த வெற்றியாக இருந்தாலும், பிரதமர் நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த தனிப் பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகின்றது.