Home Featured நாடு உலக யோகா தினம் – இந்தியத் தூதரக ஏற்பாட்டில் டாக்டர் சுப்ரா சிறப்பு வருகையோடு ஞாயிற்றுக்கிழமை...

உலக யோகா தினம் – இந்தியத் தூதரக ஏற்பாட்டில் டாக்டர் சுப்ரா சிறப்பு வருகையோடு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது!

786
0
SHARE
Ad

Isha - International Yoga day - Logo -featureகோலாலம்பூர் – ஜூன் 21ஆம் தேதியை ஐக்கிய நாட்டு சபை உலக யோகா தினமாக அறிவித்துக் கொண்டாடி வருகின்றது. இதனை முன்னிட்டு மலேசியாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 19) கோலாலம்பூரில் அனைத்துலக யோகா சிறப்பு தினக் கொண்டாட்டங்கள் காலை 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரை நடைபெறுகின்றது.

கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த அனைத்துலக யோகா தினம் கொண்டாடப்படுகின்றது.

Subramaniam Drகோலாலம்பூர், ஜாலான் செராஸ் சாலையின் 3 1/2 மைலில் உள்ள செராஸ் பூப்பந்து விளையாட்டரங்கில் (செராஸ் பேட்மிண்டன் ஸ்டேடியம்) நடைபெறும் இந்த அனைத்துலக யோகா தின நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர். சாதாரண உடையிலோ, அல்லது யோகாவுக்குப் பொருத்தமான விளையாட்டு சீருடையிலோ இந்த நிகழ்ச்சிக்கு வருகை தரலாம்.